×

கரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் இனிப்பு கொடுத்து வரவேற்பு

கரூர், அக். 2: கரூரில் போக்குவரத்து காவல்துறையினர் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு லட்டு கொடுத்து வரவேற்றனர்.ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். நேற்று கரூர் மாவட்டம் உட்கோட்ட காவல்துறை, கரூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா மனோகரா கார்னரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக்காவல் துறையினர் லட்டு வழங்கி வரவேற்றனர்.போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, நகர காவல்துறை இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தலைமைக்காவலர் மோகன், துரைசாமி, முகமதுமீரான், ஆனந்த், ராமலிங்கம் மற்றும் போலீசார் லட்டுகளை வழங்கினர்,,மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் இனியாவது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி உயிரை காத்துக் கொள்ள அறிவுரை கூறினர். நான்கு சக்கர வாகனங்களில சீட்பெல்ட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி சீட்பெல்ட் அணிய கூறினர். தலைக்கவசம் அணிவதால் தலைக்காயம் மரண விபத்துக்களை தவிர்க்கலாம். கண், காதுகளை பாதுகாப்பதுடன், காற்று புகை போன்றவற்றால் ஏற்படும் தீமைகளில் இருந்து பாதுகாக்கலாம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.

Tags : Motorists ,traffic police ,Karur ,
× RELATED அருப்புக்கோட்டையில் சாலை ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டுனர்கள் அவதி