கரூர் கோடங்கிபட்டி சாலை ஆட்சிமங்கலம் அருகில் பேரிகார்டு இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து

கரூர், அக். 2: கரூர் கோடங்கிப்பட்டி சாலையில் ஆட்சிமங்கலம் அருகே பேரிகார்டு வைக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.கரூரில் இருந்து கோடங்கிப்பட்டி, திருச்சி மற்றும் மதுரை பைபாஸ் சாலை, திண்டுக்கல், வெள்ளியணை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராயனு£ர் வழியாக கோடங்கிப்பட்டி பைபாஸ் சாலையை அடைந்து சென்று வருகிறது. இதில், ராயனூர் பொன்நகரைச் கடந்ததும், ஆட்சிமங்கலம் அருகே விபத்தை விளைவிக்கும் வகையில் ஆபத்தான வளைவு பாதை உள்ளது. இரவு நேரங்களில் இந்த பாதையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், ஆட்சிமங்கலம் அருகே பேரிகார்டு வைக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான ஆட்சிமங்கலம் வளைவு பாதையில் பேரிகார்டு வைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : road ,Karur Kodangipatti ,junction ,
× RELATED சாயல்குடியில் மும்முனை சந்திப்பில் சேதமடைந்த சாலை