×

அரசு மருத்துவ கல்லூரி நுழைவு வாயில் பகுதி சேறும் சகதியுமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் அவதி

கரூர், அக். 2: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் பகுதி சேறும் சகதியுமாக உள்ளதால் மாணவ, மாணவிகள் முதல் அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.கரூர் காந்திகிராமம் பகுதியில் புதியதாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று தற்போது முதலாமாண்டு மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் விடுதி, அலுவலகம், மருத்துவமனை போன்ற பிற கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் தினமும் நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மருத்துவ கல்லூரியின் நுழைவு வாயில் பகுதி மிகவும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தற்போதைய நிலையில் மருத்துவ கல்லூரிக்கு செல்லும் சாலைகளில் பல பகுதி மண்சாலையாகவே காணப்படுவதால் மழையின் போது, சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.எனவே அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி மருத்துவக் கல்லூரியை சுற்றிலும் தார்ச்சாலை அமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்
கப்படுகிறது.

Tags : Student ,Government Medical College ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...