×

கரூர் தாலுகா அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு அகற்றிய கிராம உதவியாளர் படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 2: ஆக்கிரமிப்பு அகற்றிய கிராம உதவியாளர் படுகொலை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேகம்புத்தூர் கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் ஆக்கிரமிப்பு அகற்றியதற்காக மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதைக்கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இறந்தவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கை வலியுறுத்தி நேற்று மாலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க கரூர் மாவட்ட தலைவர் அரசகுமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தனலட்சுமி, சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கருணாகரன் கண்டன உரையாற்றினார். வருவாய்த்துறையில் வேலைப்பளு, உயர் அதிகாரிகள் அழுத்தம், போலீஸ் பாதுகாப்பின்றி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு அனுப்ப கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Demonstration ,office ,Karur ,taluk ,
× RELATED கால் டாக்சிகள் இயக்குவதற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்