×

தாக்கப்பட்ட காவலர்களிடம் நலம் விசாரித்தார் புதுவையில் உள்ள ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்

புதுச்சேரி, அக். 2: புதுவையில் உள்ள ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். புதுவை கரிக்கலாம்பாக்கத்தில் ரோந்து பணிக்காக சென்ற மைக்கேல், சிவகுரு ஆகிய போலீசாரை ரவுடிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடிகளால் போலீசார் தாக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் புதுச்சேரி காவல் துறைக்கு இது ஒரு சவாலான விஷயமாகியுள்ளது.

இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்கள். புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா, ஐஜி சுரேந்தர் சிங் ஆகியோர் காயம் அடைந்த போலீசாரின் வீடுகளுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். வேல்ராம்பட்டில் உள்ள மைக்கேலின் வீட்டுக்கு சென்றவர்கள்,, பின்னர் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள சிவகுரு வீட்டிற்கு சென்றனர்.

அப்போது சிவகுருவின் தாயார் வாசுகியிடம் டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா கூறுகையில், உங்கள் மகன் சிவகுரு காவல் துறையின் சொத்து. அவர் மேல் தாக்குதல் நடத்தப்பட்டதால் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தாக்கியவர்களை விட்டுவிட மாட்டோம். புதுச்சேரியில் செயல்படும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். உங்கள் மகன் தனது கடமையை செய்திருக்கிறார். அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறு ஏற்பட விடமாட்டோம், என்றார்.

Tags : Routes ,New Delhi ,
× RELATED சென்னையில் பொதுத்தேர்வு எழுதும்...