×

ஓட்டல், லாட்ஜ், பஸ் நிலையத்தில் களஆய்வு கொசு, புழு உற்பத்தி அழிப்பு

புதுச்சேரி, அக். 2: புதுச்சேரியில் ஓட்டல், லாட்ஜ், பஞ்சர் கடைகளில் மலேரியா குழுவினர் அதிரடி களஆய்வு மேற்கொண்டு கொசு, புழு உற்பத்தியை கண்டறிந்து அழித்தனர். புதுச்சேரி அரசு நலவழித்துறையின் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மற்றும் குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புதிய பேருந்து நிலையம், மறைமலையடிகள் சாலையில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு, புழுக்களை கண்டறிந்து அழிக்கும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று காலை நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அஜ்மல் அகமது தலைமை தாங்கினார். தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட மாநில அதிகாரி சுந்தர்ராஜ், மலேரியா உதவி இயக்குனர் கணேசன், புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், நகராட்சி மருத்துவ அதிகாரி கதிரேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் பேருந்து நிலைய பகுதிகளில் தீவிர கள ஆய்வு மேற்கொண்டனர்.

தங்கும் விடுதிகள், உணவகங்கள், பஞ்சர் கடைகளில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு, புழுக்களின் உற்பத்தியை கண்டறிந்து களப்பணியாளர்கள் மூலம் அழிக்கப்பட்டது. மலேரியா தொழில்நுட்ப உதவியாளர் செந்தில்வேலன், பொது சுகாதார செவிலிய அதிகாரி கீதா, சுகாதார ஆய்வாளர் யசோதா, உதவி ஆய்வாளர்கள் அய்யனார், தாமோதரன், வெங்கட்ராமன் கொண்ட 6 குழுக்களாக பிரிந்து கொசு, புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் வழங்கினர். இம்முகாமின்ேபாது, நீர் தேங்கி கிடக்கும் பகுதியில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. ஏடீஸ் கொசுக்களை அழிக்கும் புகை மருந்தும் அடிக்கப்பட்டது. மலேரியா மற்றும் பைலேரியா களப்பணியாளர்கள் களப்பணி செய்தனர்.

Tags : hotel ,bus station ,lodge ,
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்