×

ஜூஸ் கடையில் தீ விபத்து

புதுச்சேரி, அக். 2:  புதுச்சேரி வழுதாவூர் சாலையில் ஜூஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உரிமையாளர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.புதுவை கதிர்காமம் நேரு வீதியில் வசிப்பவர் பழனிசாமி (38). இவர் வழுதாவூர் மெயின்ரோடு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி எதிரே ஜூஸ் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை கடையை திறந்த பழனிசாமி அங்கு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவரது கடையில் இருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ குபீரென கடை முழுவதும் பரவிய நிலையில் அங்கிருந்த பழனிசாமி தீக்காயமடைந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடியவே, கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து அரைமணி நேரம் போராடி தீ, அருகிலுள்ள மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பழனிசாமியின் கடை முற்றிலும் எாிந்து சாம்பலானது. இந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Juice ,store ,
× RELATED ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடை மூடல் அரசு அறிவிப்பு