×

மாநில அளவிலான கராத்தே போட்டி அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் சாதனை

கடலூர், அக். 2:  மாநில அளவிலான கராத்தே போட்டி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி, நாகை, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் கட்டா பிரிவில் கடலூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஹரிவர்ஷன், பர்வேஷ், ஓம்கார் உள்ளிட்டவர்கள் முதலிடத்தையும், அமிர்தசரஸ், லோகேஸ்வரன் இரண்டாம் இடத்தையும், பவன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

இதுபோன்று குமுதே பிரிவில் துரைகிருஷ்ணன் முதலிடத்தை பிடித்தார். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்
களையும், இதுபோன்று மலேசிய நாட்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற கராத்தே பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணனுக்கும் பள்ளி நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது. பள்ளி தாளாளர் சிவகுமார், முதல்வர் பாண்டே மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags :
× RELATED பெண் தூக்கிட்டு தற்கொலை