×

கல்லூரி மாணவி மாயம்

சிதம்பரம், அக். 2:   சிதம்பரம் அருகே தெற்கு காளியன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் அகல்யா (19). இவர் சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி இரவு இவர் வீட்டில் படுத்து தூங்கிய நிலையில் நள்ளிரவில் அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் தோழிகள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து நடராஜன் அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான கல்லூரி மாணவி அகல்யாவை தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED கல்லூரி மாணவி மாயம் போலீசில் தாய் புகார்