×

கடலூரில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

கடலூர் அக். 2: கடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் தலைமையில்   நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற முதல் தகவல் அளிப்பவருக்கான வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் ஆட்சியர் அன்புச்செல்வன் பேசியதாவது: இயற்கை பேரிடர் சீற்றம் ஏற்படுகிற மாவட்டமாக கடலூர் மாவட்டம் அறியப்படுகிறது.
முதல் தகவல் அளிப்பவர்கள் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பாதிப்புகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் வெள்ளம் சூழக்கூடிய பகுதிகளாக 278 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் பெண்களும், குழந்தைகளும் மிகவும் பாதிப்படைகின்றனர். பொதுமக்கள் விழிப்புணர்வோடு  அலுவலர்களை தொடர்புகொண்டு மற்றவர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். தீயணைப்புத்துறை, காவல்துறை, மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை (1077) எண்களை பயன்படுத்தி உங்களையும் பாதுகாத்துக்கொண்டு, மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து நடந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் பார்வையிட்டார். இப்பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய மீட்பு கருவிகளை கொண்டு தீயணைப்புத்துறையினர் தற்காப்பு முதலுதவி போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக முதல் தகவல் அளிப்பவர்கள் (பெண்கள்) மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் செயல்விளக்கம் அளித்தனர்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், தனித்துணை ஆட்சியர் பரிமளம், உதவி இயக்குநர் (வேளாண்மை) பூவராகவன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.

Tags : Cuddalore ,
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு