×

புரட்டாசி சுவாதி கீழப்பாவூர், புளியங்குடி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு

நெல்ைல, அக். 2:  புரட்டாசி சுவாதி நட்சத்திரத்தையொட்டி கீழப்பாவூர், புளியங்குடி நரசிம்மர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். புளியங்குடி பஸ் நிலையம் அருகேயுள்ள லட்சுமி நரசிம்மர் கோயில், தட்சிண அகோபில ஸ்தலமாகும்.  கிருதயுகத்தில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் காட்சியளித்த  சொரூபத்தில் லட்சுமி நரசிம்மர் இங்கு கோயில் கொண்டுள்ளார். கிழக்கு நோக்கிய இக்கோயிலின் கருவறையில் மூலவராக லட்சுமி நரசிம்மர் வீற்றிருப்பது வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள் நடைபெறும்.

புரட்டாசி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி   கோயிலில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள் நடந்தன. மாலை 3 மணிக்கு சூலினி துர்க்கா ஹோமம்,  குபேரலட்சுமி ஹோமம், சிறப்பான கல்வி தரும் சரஸ்வதி ஹோமம், தம்பதி ஒற்றுமை நல்கும் லட்சுமி நாராயணர் ஹோமம் ஆகியன நடந்தன. 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து உற்சவமூர்த்தி கோயிலை வலம்வருதல் நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.இதேபோல் கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலிலும் புரட்டாசி சுவாதி சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags : Prattasi Swathi ,worship ,Kilappavur ,Puliyankudi Narasimha Temple ,
× RELATED ஒன்றிய அரசு சட்டத்தை வழிபாடாக...