×

கீழப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

பாவூர்சத்திரம், அக். 2:  கீழப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின்  பாவூர்சத்திரம் கிளை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கீழப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. தலைமை வகித்த வங்கிக்கிளை மேலாளர் ஞான மருதபாண்டியன், முகாமை துவங்கிவைத்தார். இதில் பங்கேற்ற மக்களுக்கு நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இலவசமாக கண் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் வங்கி பணியாளர்கள் அருண்குமார், புஷ்பவனேஸ்வரன், நாகராஜன், கணபதி மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் வங்கி அலுவலர்கள்  
செய்திருந்தனர்.

Tags : Free Eye Treatment Camp ,
× RELATED விளாத்திகுளம் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்