காந்தி ரத யாத்திரைக்கு கடையத்தில் வரவேற்பு

கடையம், அக். 2: கடையம் வந்த காந்தி 150வது ஆண்டு பிறந்த நாள் ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு மகாத்மா காந்தி சேவா மையம் சார்பில் கடந்த மாதம் 26ம் தேதி காந்தி ரத யாத்திரை செங்கோட்டையில் துவங்கியது. ரத யாத்திரைக்கு செல்லும் வழியெல்லாம் மக்கள் வரவேற்பு அளித்தனர். அந்தவகையில்  கடையம் வந்தடைந்த ரத யாத்திரைக்கு கடையம் நலச்சங்கம், கடையம் அரிமா சங்கம் மற்றும் தேசபக்தர்கள் சார்பில் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.

 கடையம் பஸ்நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டடது. இதில் கடையம் நலச்சங்கத் தலைவர் கல்யாணி சிவகாமிநாதன், செயலாளர் கோபால், இணைச் செயலாளர் சோமசுந்தரம், கடையம் அரிமா சங்கத் தலைவர் குமரேசன், ரவணசமுத்திரம் சேவாலயா சமுதாயக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தான், பசுமை நண்பர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன், கடையம் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முருகன், காந்தியவாதி விவேகானந்தன், வெங்காடம்பட்டி திருமாறன் மற்றும் தேசபக்தர்கள் பலர் பங்கேற்றனர்.Tags : Gandhi Ratha Yatra ,
× RELATED களக்காடு அருகே வெள்ளத்தால் சேதமடைந்த...