×

நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு

நெல்லை, அக்.2:   நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நேற்று காலையில் மாநகர் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜா மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பாளை பகுதி செயலாளர் வக்கீல் ெஜனி, விகேபி சங்கர், கணபதிசுந்தரம், திருத்து சின்னத்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  தொடர்ந்து வேட்பாளர் நாங்குநேரி தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆசி பெற்றார். திருமலைபுரம் ஊர் பிரமுகர் ரங்கநாதன் பண்ணையார், பட்டையன்சேரி முருகன் பண்ணையார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் காரியாண்டி அருகே தினையூரணி புனித சலேத் மாதா ஆலயத்தில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். நிகழ்ச்சியில்  ஊராட்சி செயலாளர்கள் தளபதி சமுத்திரம் பெருமாள், பருத்திப்பாடு கணபதி, மருதகுளம் மருதமுத்து மற்றும் சிந்தாமணி ராமசுப்பு, திருமலையபுரம் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : constituency ,candidate ,Returnarpatti Narayanan Namukuneri ,
× RELATED சமத்துவபுரம் அமையும் இடத்தில்...