×

இணையத்தின் வாயிலாக மத்திய அரசு கண்காணிக்கும்

புதுக்கோட்டை, அக்.2: கிராம பஞ்சாயத்துகளுக்கு செய்யப்படும் வரவு செலவுகளை மத்திய அரசின் பொதுநிதி மேலாண்மை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் அனைத்து கிராம பஞ்சாயத்துகளின் வரவு செலவுகளை மத்திய நிதி அமைச்சகத்தின் மத்திய கணக்கு துணை இணைத்தின் வழியாக நேரடியாக கண்காணிக்க தொடங்கியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி செயலாளர்கள் பணியில் இருந்து வருகின்றனர். கிராம பஞ்சாயத்துகளை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 13 ஊராட்சி ஒன்றிய அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இரண்டு பிடிஓக்கள் மற்றும் துணை பிடிஓக்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் கிராம பஞ்சாயத்துகளில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தூய்மை பணி உள்ளிட்ட பணிகளை கண்காணிகப்பாளர்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் தனித்தனி பஞ்சாயத்து அலுவலகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு ஊராட்சி செயலாளர்கள் பணியில் இருப்பார்கள். இந்த பணியில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்கள். வரவு செலவு கணக்குகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிப்பார்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் தனித்தனியாக தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வங்கிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டு வந்தது. அதாவது பஞ்சாயத்தில் ஒரு தெருவிளக்கு சரி செய்தல், குடிநீர் மோட்டார் பழுது நீக்குதல் பணி மேற்கொண்டால் அந்த பணியாளர்களுக்கு பஞ்சாயத்து சார்பில் காசோலை வழங்கப்படும். இந்த காசோலையில் மக்கள் பிரதிநிதிகள் இருந்தவரை பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் கையொப்பம் இட்டு வழங்குவார்கள். அவர்கள் வங்கிக்கு சென்று பணம் பெற்றுக்கொள்வார்கள். தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பஞ்சாயத்துகளில் செலவு செய்யப்படும் தொகைக்கான காசோலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கையெழுத்து போட்டு வழங்கி வந்தனர். இந்நிலையில் இந்த மாதம் முதல் தேதியில் இருந்து இந்த வரவு செலவு திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய கணக்கு துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொது நிதி மேலாண்மை திட்டத்தில் (பிஎப்எம்எஸ்) கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இனி எந்த பஞ்சாயத்துகளில் செலவு செய்யும் தொகையை எடுத்து உரிவயர்களிடம் கொடுக்க சோலைகள் பயன்படுத்த முடியாது. இதனால் உரியவர்களுக்கு மட்டுமே பணம் சென்று சேரும். இதில் எந்த முறைகேடும் செய்வது கடினம். குறிப்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளில் நடக்கும் வரவு செலவுகளை மத்திய தணிக்கை துறை இணையளத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Tags : government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...