×

சிட்டா அடங்கல் வழங்க கோரி

அறந்தாங்கி, அக்.2: அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் பிர்காவில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடியாளர் பெயரில் அடங்கல் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சுப்பிரமணியபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் பிர்காவில் உள்ள நிலங்களில் சாகுபடி செய்யும் சாகுபடியாளர்கள் இந்த ஆண்டு வங்கிகளில் விவசாயக் கடன் பெறவும், பயிர் காப்பீடு செய்யவும் தேவைப்படும் அடங்கல் சான்றிதழை வருவாய்த் துறையினரிடம் கேட்டனர். அதற்கு வருவாய்த்துறை அனுமதி மறுத்தது. மேலும் பட்டாதாரரர்களுக்கு மட்டுமே அடங்கல் சான்று வழங்க முடியும் எனவும் தெரிவித்தது. இதனால் அரசர்குளம் பிர்காவில் ஏராளமான சாகுபடியாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் வருவாயத்துறையில் முறையிட்டும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட அரசர்குளம் பிர்கா அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பினர், அரசர்குளம் பிர்காவில் சாகுபடியாளர்களுக்கு அடங்கல் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சுப்பிரமணியபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுந்தர்ராஜன், கவிதாஅண்ணாத்துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மன்னகுடிசோமு, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் தொடக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, விவசாய சங்கம் தண்டாயுதபாணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chita ,
× RELATED சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி...