×

காலிப்பணியிடம் நிரப்பக் கோரி வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உள்ளிருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, அக்.2: புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் உட்பட 13 இடங்களில் வருவாய்த் துறை அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் மொத்தம் உள்ள 54 துணை வட்டாட்சியர் பணியிடங்களில் 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, கூடுதல் பொறுப்புகளைக் கவனிப்போருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. காலிப் பணியிடங்களை நிரப்பக்கூடாதென எவ்வித தடை ஆணையும் இல்லை.எனவே, காரணமே இல்லாமலே காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதை கண்டித்து கடந்த மாதம் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.எனினும், தீர்வு ஏற்படாததால் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் தீபன் தலைமை வகித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, நேற்று மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, குளத்தூர், இலுப்பூர், பொன்னமாராவதி, கந்தர்வக்கோட்டை என 12 தாசில்தார் அலுவலகங்களிலும் போராட்டம் நடைபெற்றது. ஒரே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களிலும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Revenue Officers Association ,
× RELATED மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்...