×

ரேஷன் திட்டத்தை முடக்க முயற்சி மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

கருங்கல், அக்.2 :  தமிழகத்தில்  ஏழை மக்கள் பயன்பெற்று வரும் ரேஷன் விநியோக திட்டத்தை முடக்கும் வகையில்  தற்போது பெரும்பாலான ரேஷன் அட்டைகளை முன்உரிமை இல்லாத அட்டை என மாற்ற  அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை கண்டித்து குமரி மாவட்டத்தில் நேற்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து.கருங்கலில் உள்ள கிள்ளியூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமோகன்  தலைமை வகித்தார். கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார்,  சிதம்பர கிருஷ்ணன், ரெஜி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  விஜயமோகன் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ேகாஷமிட்டனர்.

குலசேகரம்: இதுபோல் திருவட்டார் வட்ட வழங்கல் அலுவலகம் முன்  நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை  தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ் துவக்கி  வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் ரவி, வட்டார குழு உறுப்பினர்கள்  ஜோஸ்மனோகரன், தங்ககுமார், செல்வராஜ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.தக்கலை: தக்கலையில் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  முருகேசன்  தலைமை வகித்தார். தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின்,  குருந்தன்கோடு  வட்டார செயலாளர் புஷ்பதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னாள் எம்.பி.  பெல்லார்மின் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் சைமன்  சைலஸ், சந்திரகலா,  சிவானந்தம் உட்பட பலர் பேசினர். பின்னர்  மனுக்களை வட்ட வழங்கல் அலுவலர் சரளாவிடம் அளித்தனர்.

Tags : Marxist ,protests ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...