×

இரணியல் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி

திங்கள்சந்தை, அக்.2:    இரணியல்  அருகே மேல்கரை பகுதியை சேர்ந்தவர் சங்கவி(53, பெயர் மாற்றம்). இவரது சகோதரி மாற்றுத்திறனாளி. தற்போது இவர் சங்கவி வீட்டில் வசித்து வருகிறார்.  சம்பவத்தன்று மாலை சங்கவி வெளியே சென்றிருந்தார். வீட்டில் அவரது சகோதரி  தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமநாடான் (45)  வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மேலும் அவர் கத்தியை காட்டி  மிரட்டி, தகாத வார்த்தைகள் பேசி மாற்றுதிறனாளி பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். இதனையடுத்து ராமநாடான் அங்கிருந்து  தப்பி சென்றார். இதனிடையே வீட்டுக்கு வந்த சங்கவியிடம் நடந்த சம்பவத்தை அவரது சகோதரி கூறி  அழுதார். இது குறித்து சங்கவி இரணியல் போலீசில் புகார் செய்தார்.  ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாடாரை கைது செய்தனர்.


Tags : Eraniel ,
× RELATED நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம்...