×

தக்கலை அருகே கடன் வசூலிக்க சென்ற முகவரை தாக்கி செயின் பறிப்பு

தக்கலை, அக். 2:  நாகர்கோவில்  கோட்டாரை அடுத்த வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன்(42). இவர் அங்குள்ள  நிதி நிறுவனம் ஒன்றில் முகவராக உள்ளார். இந்நிறுவனத்தில் இருந்து தக்கலையை அடுத்த பிலாந்தோப்புவிளையை சேர்ந்த மல்லிகா என்பவர் கடன் பெற்றுள்ளார். இந்த  நிலையில் கடன் தொகையை வசூலிக்க மோகன் மல்லிகா வீட்டுக்கு சென்றுள்ளார்.  அப்போது மல்லிகா, சலால், தினேஷ் உட்பட 5 பேர் சேர்ந்து மோகனை தாக்கி கொலை  மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை  பவுன் செயினை பறித்துள்ளனர். இது தொடர்பாக மோகன் தக்கலை போலீசில்  புகார் அளித்தார். போலீசார் மல்லிகா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : agent ,Takalai ,
× RELATED ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் சுட்டுக் கொலை