×

சாத்தான்குளத்தில் நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம்

சாத்தான்குளம், அக்.2: தமிழக நூலகங்களில் 1 கோடி உறுப்பினர் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து அனைத்து நூலகங்களிலும தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். வாசிக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் மாணவ,மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுப்பினர் சேர்க்கப்பட்டு வருகின்றனர். சாத்தான்குளம் ராமகோபால கிருஷ்ணபிள்ளை கிளை நூலகத்தின் சார்பாக சாத்தான்குளம் புளியடி தேவிமாரியம்மன் கோயில் 9ம் திருவிழாவில் வாசிக்கும் திறனை அதிகரிக்க வலியுறுத்தியும், நூலகத்தின் பயன்களை கூறி தீவிர உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது.

வாசகர் வட்ட தலைவர் நடராசன் தலைமை வகித்தார். நூலகர் சித்திரைலிங்கம் வரவேற்றார். இதில் நூலக புரவலர்கள் பிரேம்குமார், ஈஸ்வர் சுப்பையா ஆகியோர் நூலகத்தின் சிறப்புகள், புத்தகம், நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் குறித்து எடுத்துரைத்தனர். இதில் முதற்கட்டமாக 13 உறுப்பினர்கள் புதியதாக சேர்க்கப்பட்டன. இதில் கோயில் நிர்வாகிகள் நடராஜன், பெரியராஜ், செந்தூர்ராஜன். ஓய்வுபெற்ற அஞ்சலக அலுவலர் அனந்தகிருஷ்ணன், நூலக பணியாளர் மர்த்தனாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நூலகர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags : Satan Library ,
× RELATED ஜேசிபி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது