×

வைகுண்டத்தில் சித்த மருத்துவ முகாம்

வைகுண்டம், அக்.2: வைகுண்டம்  மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, காசநோய் பிரிவு சார்பில்  காசநோயாளிகளுக்கு சித்த மருத்துவ முகாம் நடந்தது. தூத்துக்குடி  மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநர் சுந்தரலிங்கம், காசநோயாளிகளுக்கான  சிகிச்சை முறைகள் குறித்தும், தலைமை மருத்துவர் வெங்கட்ரங்கன் நோயின் நிலை  குறித்தும், சித்த மருத்துவர் ரதிசெல்வம் சித்த மருத்துவம் குறித்தும்  எடுத்துரைத்தனர்.இதில், காசநோய் பிரிவு திட்ட ஒருங்கிணைப்பாளர்  சந்தானசங்கர்வேல், செல்லப்பா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்  மாரிமுத்து, சுகாதார பார்வையாளர் சுதாமணிமேகலை, மருந்தாளுனர்  முத்துலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். காசநோய் தீர்வுமுறை  அமைப்பாளர் குப்புசாமி நன்றி கூறினார்.Tags : Siddha Medical Camp ,Vaikuntam ,
× RELATED வைகுண்டம் அருகே ரயில் மோதி வாலிபர் பலி