×

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் தூய்மை பணி

ஓட்டப்பிடாரம், அக்.2:  பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் என்எஸ்எஸ் மாணவர்களின்  தூய்மை பணி நடந்தது.  மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை பகுதிகள், தூத்துக்குடி விமான நிலையம் ஆகிய இடங்களில் தூய்மை  முகாமினை நடத்தினர். தொடர்ந்து  அங்குள்ள வளாக பகுதிகளில் பல்வேறு  மரக்கன்றுகளை நட்டினர். நிகழ்ச்சியில்   மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், தூத்துக்குடி விமான நிலைய மேலாளர் ஜெயராமன், வீரசக்கதேவி ஆலயக்குழுத்தலைவர் முருகபூபதி மற்றும் பலர் பங்கேற்
றனர்.


Tags : Panchalangurichi Kattabomman Fort ,
× RELATED முதல்வர் வருகையொட்டி அரசு மருத்துவமனையில் தூய்மை பணி தீவிரம்