×

வீரபாண்டியன்பட்டினத்தில் விவிலிய கண்காட்சி

திருச்செந்தூர், அக். 2: வீரபாண்டியன்பட்டினம் ஆலயத்தில்விவிலிய கண்காட்சி நடந்தது. வீரபாண்டியன்பட்டினத்தில் 125 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய தோமையார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் விவிலியக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான விவிலிய கண்காட்சி, நேற்று முன்தினம் நடந்தது. கண்காட்சியில் கலைவழி இறைமொழி என்ற தலைப்பில் மறைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இணைந்து புதிய ஏற்பாடு நிகழ்வுகளை தத்ரூபமாக நடித்துக்காட்டினர். கண்காட்சியில் புனித ஞானப்பிரகாசியார் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள், மறைக்கல்வி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வீரபாண்டியன்பட்டினம் பங்குதந்தை கிருபாகரன், இணை பங்குத்தந்தை வளன்அரசு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Tags : Exhibition ,Veerapandiyanpattinam ,
× RELATED அரசு அருங்காட்சியகம் சார்பில் நடந்த...