×

புதூர் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்

சாத்தான்குளம், அக்.2: சாத்தான்குளம் அருகே புதூரில் வீடுகள் அருகில் அபாயநிலையில் உள்ள மின்கம்பத்தை  மாற்றியமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சிக்குள்பட்ட புதூரில் 100க்கு மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு வீடுகளுக்கு மின்சப்ளை செய்யும் பொருட்டு மின்வாரியம் சார்பில் சிமென்ட் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளானதால் தற்போது அதிலுள்ள சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து போய் துரு பிடித்த இரும்பு கம்பிகள் தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மின் பழுது ஏற்பட்டால் அதில் ஏறி பழுது பார்க்க காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் எந்நேரமும் சரிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் காணப்படுகிறது. ஆதலால் மின்வாரிய அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இந்த அபாய மின்கம்பத்தை  மாற்றி அமைக்க வேண்டும் என திமுக கிளை செயலாளரும், முன்னாள் ஊராட்சி உறுப்பினருமான ராஜேஷ் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Power station ,area ,Pudur ,
× RELATED கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்