×

முத்தரசன் பேட்டி அரசு மருத்துவ காப்பீடு விழிப்புணர்வு முகாம்

திருத்துறைப்பூண்டி, அக்.2: திருத்துறைப்பூண்டியில் அரசு மருத்துவமனை சார்பில் பிஎம்ஜேஒய்மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் மருத்துவம் மற்றும் சிகிச்சை பெறுவதற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைதலைமைடாக்டர் சிவகுமார் தலைமைவகித்தார், நகரவங்கிதலைவர் சண்முகசுந்தர் முன்னிலைவகித்தார். இதில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் விஜயா, பாலாஜி உள்ளிட்டோர் மற்றும் செவிலியர்கள். மருந்தாளுநர்கள், ரத்தபரிசோதனைஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட 250 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைவழங்கினர். இது குறித்து அரசுதலைமை டாக்டர் சிவகுமார் தெரிவித்ததாவது: இந்த மருத்துவ முகாம் பிரதமர் மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்தி வருகிறோம் முகாமில் கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவைசிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மேல் சிகிச்சைபரிந்துரை செய்யப்படுவார்கள் .திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அப்பன்டிஸ் , குடல் இறக்கம், கருப்பை நீக்குதல் , எலும்பு அறுவைசிசிச்சை, டயாலிசிஸ்உள்ளிட்டவை மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்து கொள்ளலாம் என்றார்.Tags : Medical Insurance Awareness Camp ,Mutharasan ,
× RELATED அடுத்த ஜூன் மாதம் வரை இலவச...