×

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் இணையவழி நேரடி பணம் செலுத்தும் வசதி நில உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்

மன்னார்குடி, அக். 2: இணைய வழி நேரடி பணம் செலுத்தும் வசதியை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஏற்படுத்தி ஆன்லைன் ஆவண பதிவை எளிமை படுத்த வேண்டும் என மன்னார்குடியில் நடைபெற்ற மன்னை வட்டார நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.மன்னை வட்டார நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்க செயற்குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். சங்ககவுரவ தலைவர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து சங்க செயலாளர் கோவிந்தராஜ் பேசினார். கூட்டத்தில், 150 ஆண்டுகள் பெருமை வாய்ந்த மன்னார்குடி நகரில் ஏராளமான கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. மன்னார்குடியில் மையப்பகுதியில் செல்லும் சாலைகள் வழியாக தினசரி நூற்றுக்கணக்கான் கனரக மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்வதால் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் போக்குவரத்து நெருக்கடியால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. எனவே அரசு ஏற்கனவே அறிவித்த சுற்றுவட்ட புறவழி சாலை திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும்.

பத்திரப்பதிவுத்துறையில் ஆவண பதிவுகளின் இணைய தளம் வழியாக கட்டணம் செலுத்தும் முறை குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு துறை சார்பில் அளிக்கப் படவில்லை. அதன்காரணமாக தனியாரை மக்கள் நாடி செல்வதால் பண இழப்பு மற்றும் தேவையில்லாத காலதாமதங்கள் ஏற்படுகிறது. எனவே இணைய வழி நேரடி பணம் செலுத்தும் வசதியை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ஏற்படுத்தி ஆன்லைன் ஆவண பதிவை எளிமை படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக சங்க பொருளாளர் முத்துக்குமார் வரவேற்றார். ராஜசேகர் நன்றி கூறினார்.

Tags : landlord association ,dependents offices ,
× RELATED சார்பதிவாளர் அலுவலகங்களில் புரோக்கர்கள் நுழைய தடை: நாளை முதல் அமல்