×

அகில இந்திய அளவில் என்சிசி வீரர்களுக்கான விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு

மன்னார்குடி, அக்.2: அகில இந்திய அளவிலான தேசிய மாணவர் படை வீரர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் புதுடெல்லி ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் நாடு முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலும் இருபால் என்சிசி வீரர்கள் பங்கேற்றனர். இதில் துப்பாக்கி சுடுதல் மற்றும் தடை தாண்டுதல் போட்டிகளில் தமிழகம் சார்பில் 89 என்சிசி வீரர்கள் பங்கேற்றனர். இதில் கும்பகோணம் 8வது படைப்பிரிவின் சார்பில் 14 வீரர்கள் பங்கேற்று அதிக புள்ளிகளை பெற்று தர வரிசை பட்டியலில் தேசிய அளவில் 5ம் இடத்தை பிடித்தனர்.இப்போட்டிகளில் கும்பகோணம் 8வது படைப்பிரிவின் சார்பில் பங்கேற்ற மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரி மாணவி ரஷியா தடைதாண்டுதல் பிரிவில் 2ம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.

 அதுபோல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பங்கேற்ற மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முக, கும்பகோணம் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மாணவி சாந்தனேஸ்வரி, கும்பகோணம் டவுன் உயர்நிலைப்பள்ளி மாணவி பரணி ஆகியோர் அதிக புள்ளிகளை பெற்று 2ம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக்கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அனைவரும் பாராட்டப்பட்டனர்.நிகழ்ச்சிக்கு கல்லூரி  தேசிய மாணவர் படை அலுவலர் லெப் ராஜன் தலைமை வகித்தார். இதில் கும்பகோணம் 8 வது தேசிய மாணவர்  படைப்பிரிவின் தலைமை அதிகாரி   லெப்  கர்னல் வினோத், செயல் அலு வலர் லெப் கர்னல் உன்னி கிருஷ்ணன் நாயர், சுபேதார் மேஜர் ஜோசப் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற  வீரர்களை பாராட்டி பரிசுகளை அளித்தனர்

Tags : winners ,All India NCC Sports Competition ,
× RELATED இந்தியாவில் நேற்று... பிளஸ் - 6,088 மைனஸ் - 148: வென்றவர்கள் எண்ணிக்கை 41%