×

வீரசோழன் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

கும்பகோணம், அக். 2: திருவிடைமருதூர் அடுத்த ஆடுதுறை வீரசோழன் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.  இதன் அருகே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தரைப்பாலத்தை ஒட்டி ஆற்றின் கரை பகுதியில் தண்ணீரில் மிதந்த நிலையில் அழுகிய ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து விஏஓ சாமிநாதன் கொடுத்த தகவலின்பேரில் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் ஆற்றில் விழுந்து இறந்தவர் 35 வயது மதிக்கத்தக்கவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.Tags : Veerazhozan River ,
× RELATED சித்தாலப்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு