×

போக்குவரத்துக்கு இடையூறாக தள்ளுவண்டி கடை அமைத்திருந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு

கும்பகோணம், அக். 2: கும்பகோணம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக தள்ளுவண்டி கடைகள் அமைத்திருந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கும்பகோணம் நகர பகுதி சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி நேற்று போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், எஸ்ஐ வினோத் மற்றும் போலீசார் சென்று லட்சுமி விலாஸ் அக்ரஹாரம் சாலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தள்ளுவண்டி கடைகள் அமைத்திருந்த கணேசன், லட்சுமணன், கஜேந்திரன், ஆனந்தன் ஆகிய 4 பேர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தள்ளுவண்டிகளை பறிமுதல் செய்தனர்..இதேபோல் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக மாடுகளை அவிழ்த்து விட்டிருந்த பாணாதுறையை சேர்ந்த ஆனந்தகுமார் மற்றும் மூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கும்பகோணம்- தஞ்சை சாலையில் ஆபத்தான வகையில் லோடு ஆட்டோவில் பொதுமக்களை ஏற்றி வந்த அருண் உள்ளிட்ட 2 வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மினி வாகன உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு போக்குவரத்து போலீசார் பரிந்துரை செய்தனர்.

Tags : persons ,trolley shop ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...