×

பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு

தஞ்சை, அக். 2: தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்தவர் மனோகரன். மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சவுந்தரநாயகி (48). நேற்று முன்தினம் மாலை சவுந்தரநாயகி, பேர குழந்தைகளுடன் தஞ் சை பெ ரிய கோயிலுக்கு சென்றார். சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். ஸ்டேட் வங்கி அருகில் நடந்து வந்து கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், திடீரென சவுந்தரநாயகி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதுகுறித்து சவுந்தரநாயகி அளித்த புகாரின்பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Dali St. ,
× RELATED பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறிப்பு