×

ஒட்டங்காட்டில் மருத்துவ முகாம்

பேராவூரணி, அக். 2: பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காட்டில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமை திருநெல்வேலி மாவட்ட பயிற்சி துணை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார். பரிசோதனையை எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் நீலகண்டன் துவக்கி வைத்தார். இதில் பொது, மகளிர், குழந்தைகள், கண், பல், எலும்பு முறிவு, குடல் நோய், தோல் நோய், இருதயம், நுரையீரல், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு, கிட்னி, கல்லீரல், தைராய்டு, இசிஜி, எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் 820க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

Tags : camp ,Ottangadu ,
× RELATED சிறப்பு ரத்ததான முகாம்