×

நல்லூர் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?

பாபநாசம், அக். 2: நல்லூர் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம்- வலங்கைமான் சாலையில் மெயின்சாலை வழியே நல்லூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் சமீபத்தில் தூர்வாரப்பட்டது. இந்த வாய்க்காலின் கரையில் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இந்த செடிகளை அப்புறப்படுத்தி விட்டு கரைகளில் புங்கன், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு 100 நாள் தொழிலாளர்கள் மூலம் பராமரிக்க வேண்டும்.
மழை வளத்துக்கு மரம் வளர்ப்பே ஆதாரம் என்பதால் நல்லூர் வாய்க்காலின் கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : plant ,banks ,Nallur ,
× RELATED சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு...