கொள்ளிடம் அருகே எருக்கூரில் ஆண்டி வாய்க்கால் தூர்வாரப்படுமா?

கொள்ளிடம், அக்.2: கொள்ளிடம் அருகே எருக்கூரில் சிதைந்து போன ஆண்டி வாய்க்காலை தூர் வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பிரதான புதுமண்ணியாறு பாசன வாய்க்காலிலிருந்து பிரிந்து வரும் பாசன கிளை வாய்க்கால் ஆண்டி வாய்க்காலாகும். இந்த வாய்க்கால் உப்பங்காடு கிராமத்திலிருந்து பிரிந்து அரசூர், எருக்கூர், சேந்தங்குடி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே சென்று சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி செய்து தருகிறது. மழைக்காலங்களில் அதிக மழை பொழிவதால் வயல்களில் தேங்கும் அதிகப்படியான தண்ணீரை எளிதில் வடிய வைக்கும் வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குளங்களுக்கு தண்ணீரை எடுத்து சென்று தேக்கி வைப்பதற்கு பயன்படும் வாய்க்காலாகவும் இந்த ஆண்டி வாய்க்கால் இருந்து வருகிறது.

மேட்டூரிலிருந்து புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு ஒரு மாத காலமாகியும் புதுமண்ணியாறிலிருந்து பிரிந்து செல்லும் பாசன கிளை வாய்க்காலில் இதுவரை பாசனத்திற்கான தண்ணீர் திறந்து விடவில்லை. வாய்க்கால் இது வரை தூர் வாரவும் இல்லை. இதனால் வாய்க்கால் 3 கிலோ மீட்டர் தூரத்துதிற்கு தூர்ந்தும் முட்செடிகள் மற்றும் புதர் மண்டியும் உள்ளது. இந்த கிளை வாய்க்காலை நம்பியுள்ள விவசாயிகள் தண்ணீர் வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடை

ந்துள்ளனர். இனிமேலும் தாமதம் செய்யாமல் விவசாயிகளின் நலன் கருதி ஆண்டி வாய்க்காலை தூர்வாரி ஆழ்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>