×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு மயிலாடுதுறை நகராட்சி 12வது வார்டில் சாக்கடை கழிவு வெளியேறியதால் நிலத்தடி நீர் மாசு

மயிலாடுதுறை, அக்.2: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 21வது வார்டு கொண்டாரெட்டி தெருவில் உள்ள ராதாகிருஷ்ணனன் நகரில் புனுகீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கோயில் குளத்தில் உள்ள 1 ஏக்கர் நிலத்தை பாதியை தூர்த்து பாதாள சாக்கடை திட்டத்திற்கான 2ம் எண் கழிவுநீரேற்று நிலையம் கட்டப்பட்டது. இந்த கழிவு நீரேற்று நிலையத்திற்கு ஆரோக்கியநாதபுரம் ஆராயத்தெரு, பூக்கடைத்தெரு போன்ற 10க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் அனைத்தும் சேகரிக்கப்பட்டு 2ம் நம்பர் பம்பிங் ஸ்டேஷனலிருந்து பம்பிங் செய்யப்பட்டு அதன்பிறகு முக்கிய குழாய் வழியாக மயிலாடுதுறை கும்பகோணம் சாலை பூக்கடைத்தெரு பகுதியில் முக்கிய குழாயில் இணைக்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டது.கோயில் குளத்தை பாதி தூர்த்துவிட்டு பம்பிங் ஸ்டேஷனை குடிநீர் வடிகால் வாரியம் கட்டியது, மீத குளத்தில் அவ்வப்பொழுது கழிவுநீர் தேங்குவதற்காக வைத்துக் கொண்டனர். கடந்த ஓராண்டாக இந்த 2ம்எண் கழிவுநீர் ஏற்று நிலையம் வேலை செய்யவில்லை, அதில் உள்ள மோட்டார் மட்டும் அடிக்கடி போடப்படுவதும் நிறுத்தப்படுவதும் வாடிக்கை. கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ள முக்கிய பைப்லைனில் மண் தூர்ந்துபோய்விட்டதால் இக்கழிவு நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் கழிவுநீர் செல்வதில் தடங்கல் ஏற்பட்டது, இதிலிருந்து தப்பிக்க ஆராயத்தெருவில் குறுக்கு வழியில் இணைப்பை கொடுத்து 2ம் எண் கழிவுநீரேற்று நிலையத்திலிருந்து வழிந்தோடும் கழிவுநீர் அதன் வழியாக செல்லும்படி செய்துவிட்டனர்.

இந்த குறுக்குவழியால் 2ம் எண் பம்பிங்ஸ்டேஷன் இயக்கப்படுவதில்லை, அப்படியே இயக்கினாலும் முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்படாது. வழிந்தோடும் தண்ணீர் மட்டுமே ஆராயத்தெரு வழியாக செல்கிறது. மழை காலங்களில் அதிகளவில் செல்லும் கழிவுநீர் 2ம் எண் பம்பிங் ஸ்டேஷனுக்குள் செல்லும் கழிவுநீர் எதிர்த்து அதே பளாகத்தில் உள்ள ஆள் நுழைவுத் தொட்டியிலிருந்து வெளியேறி பக்கத்தில் உள்ள குளத்தில் தேங்கி விடுகிறது. கடந்த 3 மாதமாக இக்குளத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கிக்கொண்டே இருப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் நிறமிழந்து வெளி உபயோகத்திற்கு லாயக்கற்றதாகி விட்டது, குளிக்க உபயோகப்படுத்தினால் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது கண்ணாரத்தெருவில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆராயத்தெரு பகுதியில் செல்லும் சாக்கடைக்கழிவுக்கு தடை ஏற்பட்டுவிட்டது. இதனால் 2ம் எண் கழிவுநீரேற்று நிலையத்திலிருந்து இரவு பகலாக வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். உடனடியாக இந்த பம்பிங் ஸ்டேஷனிலிருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க வேண்டும் வெளியில் விடுவதை நிறுத்த வேண்டும் நகராட்சி நிர்வாகம் இதை பார்வையிட்டு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Public Expectation Groundwater ,12th Ward ,Mayiladuthurai Municipal Council ,
× RELATED நாசரேத்தில் ₹26 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம்