×

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடக்கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், அக்.2: வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட துணை தலைவர்கள் உலகநாதன், ராஜமாணிக்கம், மாவட்ட இணை செயலாளர் வேதரத்தினம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு பழிவாங்கம் நடவடிக்கைகளை ஓய்வு பெறும் நாளன்று ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் மற்றும் 17பி குற்றசாட்டுகள் வழங்கி அரசு ஊழியரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அரசு விதிகளுக்கு புறம்பாக ஓய்வூதியம் பெறுவதை நிறுத்தம் செய்வதை அரசு கைவிட வேண்டும்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்கள் உள்ளிட்ட குறைந்த பட்ச ஓய்வூதியம் பெறாத அனைவருக்கும் குறைந்த பட்சம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு வழங்குவதுபோல் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் மற்றும் மருத்துவ படியை ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் வழங்க வேண்டும். அரசாணை 56யை ரத்து செய்து அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

Tags : Pensioners' Association ,
× RELATED ஓய்வூதியர் சங்க கூட்டம்