தரங்கம்பாடியில் உலக கடல்வழி தினம்

தரங்கம்பாடி, அக்.2: நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் மீன்வளத்துறை சார்பில் கடல்வழி தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் நடராஜன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சதுருதீன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கடலை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்தும், கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்தும், கப்பல் போன்ற கடல் வழி பணிகளில் அதற்கான கல்வியை அளித்து மகளிர்களை சேர்ப்பது குறித்தும் விளக்கப்பட்டது.மேலும் தூண்டில் செயலி பயன்பாடு குறித்து மீனவர்களுக்கு விளக்கப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Tags : World Maritime Day ,Tharangambadi ,
× RELATED தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூரில்...