காட்பாடியில் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்து நெரித்து கொன்ற மனைவி 5 மாதங்கள் கழித்து வெளியான பரபரப்பு தகவல்கள்

வேலூர், அக்.2:காட்பாடியில் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து, போதையில் இருந்த கணவனை கழுத்து நெறித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.காட்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன்(49). சைக்கிள் கடை வைத்திருந்தார். இவரது மனைவி பவானி(41). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சரவணன் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மே மாதம் 2ம் தேதி சரவணன் திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. சம்பவ இடத்திற்கு சென்ற கட்பாடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பவானி தெரிவித்துள்ளார். இருப்பினும் சரவணின் மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் சரவணன் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்தபோது அதில், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து போலீசாரின் சந்தேகத்தின் பேரில் பவானியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பவானி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:பவானி, காட்பாடியை சேர்ந்த வேலாயுதம்(35) என்பவரின் மசாலா கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது, வேலாயுதம் அடிக்கடி பவானி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்து, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.இதற்கிடையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சரவணன் அடிக்கடி வீட்டில் பவானியுடன், தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த வேலாயுதம், சரவணனை கண்டித்தாராம். பின்னர் சென்னையில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சரவணனை அனுமதித்து உள்ளனர். அங்கு 3 மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் வீட்டிற்கு வந்த சரவணன் மீண்டும் பழையபடியே மது குடித்துவிட்டு பவானியிடம் தகராறு செய்துள்ளார்.தங்களது கள்ளக்காதலுக்கும் இடையூறாக இருப்பதால் சரவணனை கொலை கொலை செய்ய முடிவு செய்து, கடந்த மே மாதம் 2ம் தேதி சரவணன் போதையில் வீட்டிற்கு வந்தபோது, பவானியும், வேலாயுதமும் சேர்ந்து பிளாஸ்டிக் வயர் மூலம் சரவணனின் கை கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்தும் பிளாஸ்டிக் பைப்பால் அடித்தும் கொலை செய்துள்ளனர்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் வீட்டில் இருந்த துப்பட்டாவை எடுத்து சரவணனை தூக்கில் தொங்கியது போல் நாடகமாடியது தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பவானி, அவரது கள்ளக்காதலன் வேலாயுதம் ஆகிய 2 பேரையும் காட்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Katpadi ,Kallakkadalan ,
× RELATED மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர் கைது