×

முத்துப்பேட்டை அருகே பேருந்து நிறுத்த நிழற்குடை முன் மணல் குவிந்து கிடக்கும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

முத்துப்பேட்டை, அக்.1: முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தியில் குடியிருப்புகள் அதிகளவில் இருக்கும் பகுதியில் பயணிகள் பேருந்து நிறுத்த குடை ஒன்று உள்ளது. இதனை இப்பகுதி மக்கள், சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு வந்து தான் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாய கூலித்தொழிலாளர்கள், மற்ற பணிக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை போன்று பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனை சமீபகாலமாக ஊராட்சி நிர்வாகம் பராமாரிப்புகள் செய்யாததால் அரசியல் கட்சியினர் இதில் போஸ்டர் ஓட்டுவது விளம்பரங்கள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்ற வாரம் அப்பகுதியை சேர்ந்த சிலர் இதன் முன்பு சட்டவிரோத மணலை எடுத்துவந்து இங்கு குவித்து வைத்துள்ளன நீண்ட நாட்களாகியும் அகற்றிக்கொள்ளாத்தால் இங்கு வரும் பயணிகளுக்கு மிகவும் இடையூறாக இருந்து வந்தது.

இந்தநிலையில் இப்பகுதியில் இரண்டொருநாளாக மழை பெய்து வருவதால் மழைநீர் வடிய வழியின்றி தற்பொழுது இந்த கட்டிடம் சுற்றிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி அசுத்தமாக கிடக்கிறது. இதனால் இந்த பேரூந்து நிழல் கட்டிடத்தை மக்கள் பயன்படுத்த முடியாதளவில் உள்ளது. இங்கு மக்கள் நிற்க வழிஇல்லாததால் பேருந்துகளும் இங்கு நிறுத்துவது கிடையாது. இதனால் மக்கள் நீண்ட தூரம் சென்று சங்கேந்தி கடைதெருவில் சென்று பேருந்தில் ஏறும் அவலம் உள்ளது. . இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை கவனத்திற்கு எடுத்து சென்றும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே சம்மந்தப்பட்டதுறையினர் உடனடியாக மணல் மற்றும் மழைநீர் ஆகியவற்றை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthupettai ,
× RELATED முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி...