×

புயலால் வீடு இழந்தோருக்கு கான்கிரீட் வீடு கோரி விவசாய தொழிலாளர் சங்கம் கையெழுத்து இயக்கம்

மன்னார்குடி, அக். 1: கடந்தாண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி நள்ளிரவில் அடித்த கஜா புயல் திரு வாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ஒன்றிய பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டது. புயலின் கோரப்பிடியில் சிக்கி ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின. வீடுகளை இழந்த மக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம் களில் தஞ்சமடைந்தனர். புயலால் தங்களின் வாழ்வாதரத்தை இழந்த மக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவிக் கரங்களை நீட்டினாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது போதுமானதாக இல்லை. புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு அறிவித்த கான்கீரிட் வீடு கட்டி கொடுக்கும் திட்டம் புயல் கடந்து 10 மாதங்கள் ஆகியும் பல இடங்களில் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க மன்னை ஒன் றியக் குழுவின் சார்பில் கஜா புயலால் வீடுகளை இழந்த அனைத்து குடும்பங் களுக்கும் பாரபட்சமின்றி காங்கீரிட் வீடு கட்டித் தர வேண்டும், அரசு புறம் போக்கு, மெய்க்கால் புறம்போக்கு, நெடுஞ்சாலைகளில் இடையூறு இல்லா மல் வசிப்போருக்கும், கோயில், மடம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்போரு க்கு வகை மாற்றம் செய்து வீட்டு மனையுடன், அரசு அறிவித்துள்ள கஜா புயல் நிவாரண வீட்டினை கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி மன்னார் குடி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளிலும் சேரடியாக சென்று பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்து கையெழுத்து பெற்று இயக்கம் நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.அதன் படி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மன்னை ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் அனைத்து ஊராட்சிகளிலும் கையெழு த்து இயக்கம் நனட பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அருகே தரிசுவேலி கிராமத்தில் பல வருடங்களாக குடியிருத்து வரும் குடிசை பகுதி மக்களிடத்தில் அனைத் திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ராதா தரணி தலைமையில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன் கையெழுத்துகளை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறி ந்தார். பொது மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை வரும் 7ம் தேதி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தாசில்தார் கார்த்திக் வசம் ஒப்படைக்க உள்ளனர்.

Tags : Signature Movement of Agricultural Workers Union ,concrete house ,storm ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...