×

தண்டலையில் சமுதாயவளைகாப்பு விழா கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

திருவாரூர், அக்.1: கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தண்டலையில் நடைபெற்ற சமுதாயவளைகாப்புவிழாவில் கலெக்டர்அறிவுறுத்தினார்.திருவாரூர் அருகே தண்டலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் புடவை, வளையல் ,மஞ்சள், குங்குமம், பழங்கள், பிஸ்கட், பேரிச்சை பழம் என மொத்தம் 9 வகையான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் ஆனந்த் வழங்கி பேசுகையில், கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் தான் கருவில் வளரும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மூலம் இதுபோன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியும், சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது என்றார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ( பொ) ராஜம்,சமூக நல அலுவலர் (பொ) ஊமையாள், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் லேகா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சீர்வரிசை தட்டு கிடைக்காததால் ஏமாற்றம்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் மொத்தம் 300 கர்ப்பிணி பெண்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 200 பேருக்கு மட்டுமே இந்த சீர் வரிசை தட்டு வழங்கப்பட்டது. மேலும் திருவாரூர் கேக்கரை பகுதியை சேர்ந்த பிரகதீஸ்வரி (22),மோகனப்பிரியா (23), ரஞ்சிதா (25 )மற்றும் அழகிரி காலனியைச் சேர்ந்த மாலதி ( 27) , பிரியதர்ஷினி (21) உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை தட்டு வழங்கப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Tags : Collector ,Pregnancy ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...