பேரூராட்சி அதிகாரிக்கு கொலை மிரட்டல் மீன் வியாபாரி கைது

முத்துப்பேட்டை அக்:1: முத்துப்பேட்டை பேரூராட்சியின் சுகாதார மேற்பார்வையாளராக இருப்பவர் வீரமணி(56). இவர் நேற்று காலை ஆசாத்நகர் பகுதியில் துப்புரவு பணியாளர்களால் சுகாதார பணி நடைப்பெற்று வந்த போது அதனை அவர் கவனித்து வந்தார். அப்பொழுது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஹாலிது மகன் மீன் வியாபாரி நவாஸ்கான்(45) என்பவர் அவரது உறவினர் வீட்டு துக்கத்தின்போது சுகாதாரப் பணி செய்யவில்லை என்று வீரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் வீரமணியை பணிகள் செய்ய விடாமல் தடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியும் மனவேதையும் அடைந்த சுகாதார மேற்பார்வையாளர் வீரமணி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வீரமணியை பணி செய்யவிடாமல் தடுத்து திட்டி கொலை மிரட்டல் விடுத்த மீன் வியாபாரி நவாஸ்கானை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags : Fisherman ,murder ,
× RELATED மீனவரின் உயிர் காக்கும் கடல் காம்பஸ்!