×

திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை

திருவாரூர், அக். 1: திருவாரூர் -நாகை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி எஸ்டிபிஐ கட்சியினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தஞ்சையிலிருந்து திருவாரூர் வழியாக நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையானது 2 வழி சாலையாக அமைக்கும் பணியினை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த தனியார் கம்பெனி ஒன்று ரூ 365 கோடிக்கு டெண்டர் எடுத்து பணியினை துவங்கியது. அதன்படி கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் இதற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்தது. இதுவரையில் 50 சதவிகித பணிகள் கூட நடைபெறாமல் இருந்து வருகின்றன. தற்போது 6 மாத காலத்திற்குள்ளாகவே இந்த சாலையானது சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.திருவாரூரிலிருந்து நாகை செல்லும் வழியில் கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம் உட்பட பல்வேறு இடங்களில் சாலையானது குண்டும், குழியுமாக மாறி வருகிறது. தற்போது மழை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே இந்த சாலையானது சேதமடைந்துள்ளது. இந்நிலையில் இந்த சாலையினை உடனடியாக சீரமைக்க கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர் முகமதுபாசில் மற்றும் பொறுப்பாளர்கள் மனு அளித்தனர். இதுகுறித்து பாசில் கூறுகையில், சாலையை சீரமைக்க கோரி 5 ஆண்டுகள் வரையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு அவசர அவசரமாக பஞ்சர் ஓட்டப்பட்ட இந்த சாலையானது தற்போது சேதமடைந்துள்ளதால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துவதன் காரணமாக மிகப்பெரிய விபத்துகள் நடைபெறுவதற்கு முன்னதாக சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு பாசில் தெரிவித்துள்ளார்.


Tags : parties ,SDPI ,highway ,Thiruvarur-Nagai ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...