×

முத்துப்பேட்டை அரசு பள்ளி என்எஸ்எஸ் முகாம் நிறைவு

முத்துப்பேட்டை, அக்.1: முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் என்எஸ்எஸ் பொன்விழா ஆண்டை முன்னிட்டு கடந்த வாரம் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் துவங்கியது. தினமும் பல்வேறு பகுதிகளை மாணவர்கள் தூய்மைப்படுத்தி வந்தனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மரக்கன்றுகள் நடுதல், பனைவிதை நடவு போன்ற பணிகளிலும் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியர் ராஜாராம் வரவேற்றார். திட்ட அலுவலர் ராஜேந்திரன் முகாம் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் மருதுராஜேந்திரன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் ராஜாராம் வரவேற்றார்.முடிவில் ஆசிரியர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.

Tags : Muthupettai Government School NSS Camp ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து