×

உலக இதய தின கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, அக்.1: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ஆதிரங்கம் கிராமத்தில் நடைபெற்று வரும் சிறப்புமுகாமில் உலகஇதயதினத்தை முன்னிட்டு இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆரோக்கியமானஇந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள் குறித்தும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள், ஆரோக்கியமான இந்தியா குறித்து ஆசிரியர் ஐயம்பெருமாள் பேசினார். என்எஸ்எஸ்மாணவர்கள் இதயவடிவில் அமர்ந்து உலகஇதயதினம் 2019 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சக்கரபாணி தன்னார்வலர்கள்ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : World Heart Day Seminar ,
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...