×

மழை எதிரொலி: குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் குறைந்தது

திருச்சி, அக்.1: மழை காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனுக்களின் எண்ணிக்கை குறைந்தது. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு மென்பொருளுடன் கூடிய 12 கையடக்க கணினிகளை, 12 சிறப்பு பள்ளிகளுக்கு வழங்கினார். கூட்டத்தில் 502 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வழக்கமாக வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்பர். 600க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும். நேற்று காலையிலிருந்தே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததாலும், தொடர்ந்து வாகனம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதாலும் மக்களின் எண்ணிக்கை சற்றே குறைந்து காணப்பட்டது. அதேபோல மனுக்களும் சற்று குறைந்தது. வழக்கமாக 600 மனுக்களுக்கு பதில் 500 மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.டிஆர்ஓ சாந்தி, சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : overcrowding ,
× RELATED மக்களுக்கு இனி நேரடி விற்பனை இல்லை:...