×

மண்வளத்தை பாதிக்கும் நெகிழி ஒழிப்பு பேரணி உப்பிலியபுரத்தில் நடந்தது

துறையூர், அக்.1: துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பேரூராட்சியில் மண்வளத்தை பாதிக்கும் நெகிழி ஒழிப்பு பேரணி நடைபெற்றது. துறையூரை அடுத்த உப்பிலியபுரம் பேரூராட்சி சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது. உப்பிலியபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலிருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பேரூராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. இதில் செயல்அலுவலர் இளவரசி பேசியபோது, நெகிழியால் மண்வளம் கெட்டுப்போவதுடன் மட்டுமல்லாமல் மனிதனின் ஆயுளையும் குறைக்கிறது. எனவே நெகியை ஒழிப்போம். நெகிழி இல்லாத பேரூராட்சியை உருவாக்குவோம் என கூறினார். இதில் இளநிலை உதவியாளர் நவரத்தினம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலும் பேரூராட்சியின் எல்லைக்குட்பட்ட வணிக கடைகள், சந்தை போன்ற இடங்களில் சோதனை செய்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் வசூலித்தனர்.

Tags : eradication rally ,Uppiliyapuram ,
× RELATED போலீஸ் விசாரணை உப்பிலியபுரம்...