×

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

மண்ணச்சநல்லூர், அக்.1: தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்குவது சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த உற்சவங்களில் ஒன்று நவராத்திரி விழா. இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்றுமுன்தினம்  தொடங்கியது. இதையொட்டி அம்பாளுக்கு குமாரிகா எனும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி உள்பிரகாரங்களில் வலம் வந்து நவராத்திரி மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த அம்பாளை திரளான பக்தர்கள் தரிசித்தனர். விழாவில் தொடர்ந்து அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 7ம் தேதியன்று சரஸ்வதி பூஜையும், 8ம் தேதி விஜயதசமி அன்று அம்பாள் புறப்பாடாகி அம்புபோடும் முக்கிய நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அசோக்குமார் தலைமையில் கோயில் அலுவலர்களும் பணியாளர்களும் செய்துள்ளனர்.

Tags : Commencement ,Navratri Festival ,Samayapuram Mariamman Temple ,
× RELATED சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.62.43 லட்சம் உண்டியல் காணிக்கை