×

2 கோயில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

வானூர், அக். 1: வானூர் அருகே இரண்டு கோயில்களின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வானூர் தாலுகா கரசானூர் கிராமத்தில் மதுரைவீரன் மற்றும் வெக்காளி அம்மன் கோயில்கள் உள்ளன. இரு கோயில்களும் அருகருகே உள்ளதால் பூசாரி திருமால் (35) என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இரண்டு கோயில்களிலும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் பூசாரி திருமால் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம்போல் கோயிலை திறக்க வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 இரண்டு கோயில்களின் வாயில்கதவுகளும் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கான்கிரீட் போட்டு பதிக்கப்பட்ட சில்வர் உண்டியல்கள் பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தன. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தபோது அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்குவாரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் உண்டியல்கள் திறந்த நிலையில் கிடந்தன. அவற்றில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரண்டனர். தொடர்ந்து திருமால் அளித்த புகாரின் பேரில் வானூர் போலீசார் கொள்ளை நடந்த ேகாயில்களை பார்வையிட்டு உடைக்கப்பட்ட உண்டியல்களையும் பார்த்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இரவிலோ அல்லது அதிகாலை நேரத்திலோ கொள்ளையர்கள் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை பெயர்த்தெடுத்து பணத்தை கொள்ளையடித்து ெசன்றிருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் வானூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : robbery ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...