திமுக வேட்பாளர் புகழேந்தி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்

விக்கிரவாண்டி, அக். 1: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மத்திய மாவட்ட பொருளாளர்  புகழேந்தியை வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது. இன்று அவர் மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் தொகுதி முழுவதும் உள்ள கிராமத்திற்கு நேரில் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். நேற்று விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  வி.சாலை, அசூர், தென்பேர், எண்ணாயிரம், பிடாரிபட்டு, ஈச்சங்குப்பம், நந்திவாடி,  வேம்பி,  தும்பூர், ஒரத்தூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, முன்னாள் இளைஞரணி எத்திராசன், மாவட்ட பிரதிநிதி ஒரத்தூர் வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி வேல்முருகன், முண்டியம்பாக்கம் ஊராட்சி செயலாளர்் ஜெயபால் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Prasanthi ,DMK ,party executives ,
× RELATED சசிகலாவின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி மீண்டும் அதிமுகவில் இணைகிறார்